சென்னை: தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது.
இதேபோல், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது.
தொழில்துறையை, மின்தட்டுப்பாடு மூன்றரை ஆண்டுகளாக புரட்டிப் போட்டிருக்கிறது. 16 ஆண்டுகளாக, கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூட திட்டம் தீட்டப்படவோ, துவக்கப்படவோ இல்லை. “கால அவகாசம் வேண்டும், பொறுத்திருங்கள்’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொழில் அமைப்புகளும் பொறுமை காத்தன. சில மாதங்களாக மின்வெட்டின் அளவு அதிகரித்தது; ஒரு மணி நேரம்… இரண்டு, மூன்று, நான்கு மணி நேரம் என, அதிகரித்துக் கொண்டே சென்றது. இது பெரும் பிரச்னையாகும் என, ஆளுங்கட்சி பயந்தது. ஓட்டுப் பதிவுக்கு முன், ஏப்., 9ம் தேதி இரவு தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென செய்த மின்தடை, தொழில் அமைப்புகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “தேர்தல் வரை பொறுத்திருங்கள்; வேறு வழியில்லை’ என, மின்வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 100 சதவீத மின்வெட்டை அமல்படுத்தியது; 16 ஆண்டுகளாக மின்உற்பத்தி, கட்டமைப்புகளில் கவனம் செலுத்தாதது; வட மாநில மின்வாரியங்களில் இருந்து, தென்னிந்திய மின்வாரியத்துக்கு மின்சாரம் பெற, போதிய மின்வழித்தடங்களை ஏற்படுத்தாதது, காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீணடித்தது; மாதக்கணக்கில் கட்டணத்தை வழங்காதது; காற்றாலைகள் நேரடியாக மூன்றாம் நபருக்கு மின்சாரம் விற்பனை செய்வதை அனுமதிக்காதது; புதிதாக காற்றாலை நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யாமல், வேறு மாநிலங்களுக்குச் செல்ல நிர்ப்பந்தித்தது; சென்னையில் மின்தடை இன்றி, மாநிலத்தின் பிறபகுதிகளில் மின்தடை செய்தது; சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரமும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு இடையில்லா மின்வெட்டை அமல்படுத்தியது என, அடுக்கடுக்கான காரணங்கள், மின்வாரியத்தின் மீதும், அரசின் மின்கொள்கையின் மீதும், தொழில் அமைப்புகளை கோபம் கொள்ளச் செய்தன. போதாக்குறைக்கு, ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கும், மின்வாரியம் வரி விதித்து ஆணையிட்டது.
இதையடுத்து, தொழில் அமைப்புகள், வீதியில் இறங்கி போராட முடிவு செய்தன. கோவையில், 36 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை அறிவித்தன. ஒருநாள் வேலை நிறுத்தம், மின்வெட்டுக்கு எதிராக நடந்த கண்டனப் பேரணி @நற்று @காவையை குலுக்கியது.மின் வெட்டு மக்களை கொதிப்படைய öŒ#துள்ளது. இதேபோல், ஓசூர், சேலம், மதுரை உட்பட தென்மாவட்டங்கள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம், மாநில அரசுக்கு தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை மக்களும், தொழில்துறையினரும் தெரிவித்தனர்.
Leave a Reply