சென்னை அபார ஆட்டம்-ராஜஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மீண்டும் பார்முக்குத் திரும்பிய முரளி விஜய் போட்ட அபாரமான ஐம்பதும், கேப்டன் டோணியின் அதிரடி ரன் குவிப்பும், சிறப்பான பந்து வீச்சும் சேர்ந்து சென்னை அணிக்கு போட்டியை எளிதாக்கி விட்டது.

முதலில் ஆடிய சென்னை அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 196 ரன்களைக் குவித்தது. முரளி விஜய் படு வேகமாக ஆடி 53 ரன்களைக் குவித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதேபோல ஹஸ்ஸியும் 46 ரன்களைக் குவித்தார்.

பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 43 ரன்களைக் குவிக்க, கேப்டன் டோணியோ 19 பந்துகளில் 41 ரன்களை நொறுக்கி அணியின் ஸ்கோரை உயர்த்தி விட்டார்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் , சென்னை பந்து வீச்சுக்கு முன்பு நிற்க முடியவில்லை. ரெஹானே மட்டும் சமாளித்து ஆடி 52 ரன்களைக் குவித்தார். இறுதியில், 19.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ராஜஸ்தான்.
Read: In English
சென்னைத் தரப்பில் போலிஞ்சர் 3 விக்கெட்களையும், அஸ்வின், ரெய்னா தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் 2வது இடத்திற்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *