மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது, சென்ற 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் மேற் கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6.2 சதவீதம் அதிகம்.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், மடி கம்ப் யூட்டர் விற்பனை, சென்றாண்டின் இதே காலாண்டை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரண மாக வே, ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் விற்பனை உயர்ந்துள்ளது என, கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன் மை ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரிவித்தார்.இக்காலாண்டில், உள்நாட்டில் கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங் களின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.குறிப்பாக, மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில் ஏசர், டெல், எச்.பி. மற்றும் லெனோவா ஆகிய நான்கு பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, 50.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம், உள்நாட்டைச் சேர்ந்த எச்.சி.எல். நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, இக்காலாண்டில், 7.1 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பாண்டின் முதல் காலாண்டில், நுகர்வோர்கள், கம்ப்யூட்டர் வாங்குவது குறைந்துள்ளது. அதனால், எதிர்பார்த்த அளவிற்கு சந்தை வளர்ச்சி காணவில்லை. இருப்பினும், பெரிய நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்திருந்தது. அரசு துறை நிறுவனங்களும், இக்காலாண்டில் அதிகளவில் கம்ப்யூட்டர்களை வாங்கின.இவற்றின் பங்களிப்பு, சென் றாண் டின் இதே காலாண்டை போலவே இருந்தது என, திரிபாதி தெரிவித்தார்.கம்ப்யூட்டர் விற்பனையில், நடப் பாண் டின் முதல் காலாண்டில், டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 16.7 சதவீதமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, எச்.பி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 12.1 சதவீதமாக காணப்பட்டது.இவ்விரு நிறுவனங் களையும் அடுத்து, ஏசர் மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் முறையே, 11.9 சதவீதம் மற்றும் 9.7 சதவீத பங்களிப்புடன், 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளன.
Leave a Reply