இந்தியர்களை தாக்குபவர்கள் ஆப்கானிஸ்தானியர்

posted in: மற்றவை | 0

ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாட்டவர்கள் தான் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், என தெலுங்கு தேசத் தலைவர் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த சரவணன் என்பவர் மீது ஸ்க்ரூ டிரைவால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாணவர்கள் அதிக அளவில் தாக்கப்படுவதால், அங்குள்ள மாணவர்களின் நிலையை அறிய தெலுங்கு தேசத் தலைவர்களில் ஒருவரான நாகேஸ்வர ராவ் மற்றும் ரேவந்த்ராவ் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டனர். ஆஸ்திரேலிய சென்று திரும்பிய நாகேஸ்வர ராவ் கூறியதாவது: ஆப்கானிஸ்தான், லெபனான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நபர்கள் தான் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதற்கு இனவெறி காரணமல்ல.

குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்க இந்திய மாணவர்கள் தயாராக இருப்பதால், பொருளாதார மந்தநிலையால் வேலை இழந்த பலர், இந்தியர்களை தாக்குகின்றனர். நள்ளிரவை கடந்தும் வேலை பார்க்கும் இந்திய மாணவர்கள் தான் அதிகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். மெல்பர்ன் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை. இருக்கக்கூடிய ஊழியர்களும் இந்தியர்களை பற்றிய போதிய தகவலை தெரிந்து வைத்திருக்கவில்லை. கோமா நிலையில் சிகிச்சை பெறும் சரவணகுமாரை பற்றி தூதரக ஊழியர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இந்த தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. இவ்வாறு நாகேஸ்வர ராவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *