மதுரை: தமிழக அமைச்சர்கள் தங்களது பணியில் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும். அப்படி இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அதிமுக தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த 1987 ம் ஆண்டு முதல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்து பணியாற்றி வருகிறார்.முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது எல்லாம் அவரது நெருங்கிய தோழியான சசிகலா உறவினர்கள் அபரிதமான செல்வாக்கில் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா , அமைச்சர்களிடம் எந்த விஷயமாக இருந்தாலும் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். உங்கள் கையெழுத்து எத்தனை முக்கியமானது என்பது உங்களுக்கு தெரியும். அந்த குடும்பத்தார் சொல்லி எதையாவது செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர்கள் யாரும் உங்களை இந்த பதவிக்கு நியமிக்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறப்படுகின்றது.
மேலும், என் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வரவேண்டிய பைல் தொடர்பான தகவல்கள் இருந்தால், அதை நீங்கள் எந்த நேரத்திலும் முதல்வரின் செயலாளர்களையோ அல்லது சசிகலாவுடனோ பேசி, என்னை தொடர்பு கொள்ளலாம்.
அதற்காக, சசிகலாவிடம் சொல்லிவிட்டோம் என்று எனக்கு தெரியாமல், அரசாங்கத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்தால், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளாராம்.
இதனால் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Leave a Reply