மும்பை: ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்டேஷன் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தை
விற்பனை செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயற்கை எரிவாயு உற்பத்தியாகும் இடங்களில் இருந்து அதை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் குழாய் அமைக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்தது. தற்போதைய நிலவரப்படி சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக இந்நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து வங்கிகளை முகேஷ் அணுகியதாகவும், எனினும் இம்முயற்சி துவக்க நிலையிலேயே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply