மும்பை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய சாப்டுவேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் இதற்கு முந்திய காலண்டை விட 15.72 சதவீதம் அதிகரித்து 1,722 கோடி ஆக உள்ளது.
சென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் வருமானம் ரூ.1,488 கோடியாக இருந்தது.இந்த அறிக்கையை இன்போசிஸ் நிறுவனம், மும்பை பங்குசந்தையில் தெரிவித்திருக்கிறது. ஜூன் 30ம் தேதி கணக்கெடுப்பின் படி இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 1,33,560 பேர் பணிபுரிகிறார்கள். இந்த நிறுவனத்தில் இந்த முதல் காலாண்டில் மட்டும் 2,740 புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று இன்போசிஸ்சின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு கோல்டு மேன் சாக்ஸ், பிடி குரூப் மற்றும் பிபி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்த காலாண்டில் மட்டும் புதிதாக 26 கம்பெனிகள் வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply