லண்டன் : அறிவியல், இன்ஜினியரிங், கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை கவர்ந்திழுப்பதற்காக, புதிய விசா திட்டத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.
பிரிட்டன் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் சாராத நாடுகளில் இருந்து, அறிவியல், இன்ஜினியரிங், கலை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை, பிரிட்டனில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, புதிய விசா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 9 முதல், இதற்கான நடவடிக்கைகள் துவங்கவுள்ளன. வரும் ஆகஸ்ட்டில் இருந்து, நவம்பர் வரை 500 பேரும், டிசம்பரில் இருந்து, அடுத்தாண்டு மார்ச் வரை, 500 பேரும் பணியமர்த்தப்படவுள்ளனர். அடுத்தாண்டு மார்ச் இறுதியில், பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது குறைப்பது பற்றி ஆய்வு செய்யப்படும். குடியேற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, நான்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரிட்டன் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply