புதுடில்லி: பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் விற்பனையை பொறுத்தவரை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தினமும், 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர, வரிகளும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்க்கு, அதிக விலை செலுத்த வேண்டியுள்ளது. எனவே, பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply