திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 7ஆம் தேதி கடைசி நாளாகும்.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஜெயாவும், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் ரொக்கையாவும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
Leave a Reply