பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, “நியூஸ்வீக்’ என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றது. இதன் மூலம், நமது நாடு சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை காட்டுகிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில், அயர்லாந்து, மொத்தமாக, 100க்கு 100 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில், 100க்கு 88, சுகாதாரத்தில், 100க்கு 90.5, அரசியலில், 100க்கு 92.8, கல்வியில், 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது.

ஆனால், இந்தியா, 100க்கு, 41.9 மதிப்பெண்களை மட்டுமே பெற்று, 141வது இடத்தை பெற்றுள்ளது. இதில், அரசியலில், 14.8 சதவீதமும், நீதித் துறையில், 54, பொருளாதாரத்தில், 60.7, சுகாதாரத்தில், 64.1, கல்வியில், 64.9 சதவீதமும் பெற்றுள்ளது.

நமது நாட்டை விட, சிறிய நாடாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் (17வது இடம்) மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *