லண்டன்: ராணுவத்துடன் நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவும் பலியாகி விட்டதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.
பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி ஆகிய இருவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரபாகரனின் பெற்றோர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் உயிருடன் இரு்பபதாகவும், தமிழகம் வழியாக அவர்கள் கனடாவுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரபாகரனின் ஒரே மகளான துவாரகவும் போரின்போது பலியாகி விட்டதாக தற்போது செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.
லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் கடைசி வரை இலங்கையில் இருந்த விடுதலைப்புலிகள் தலைவர்களுடன் தொடர்பு கொண்டி ருந்தோம்.
கடைசியாக போரை முன்னின்று நடத்தி கொண்டிருந்த கடற்படை தளபதி சூசையிடம் பேசினோம். அங்கு கடைசியாக நடந்த சம்பவங்களை எங்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.
மே 17ம் தேதி இறந்தார் பிரபாகரன்…
எங்கள் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் அவர் உறுதி செய்தார். ராணுவத்துடன் நடந்த போரில் அவர் மே 17-ந்தேதி வீர மரணத்தை எய்தினார்.
பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, மகள் துவாரகா ஆகியோரும் இறந்து விட்டதாக நம்பகமான தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளது.
மனைவி, இளைய மகன் குறித்து தெரியவில்லை..
ஆனால் பிரபாகரன் மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் நிலைமை பற்றி சரியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Leave a Reply