நியூயார்க்: உலகமகா மோசடிப் பேர்வழியான பெர்னார்டு மேடாஃப்புக்கு 150 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். மேலும் அவர் ரூ.170 பில்லியன்கள் வரை பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், அதை அவருக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து வரும் வருவாய், வட்டிகள் போன்றவை மூலம் ஈடுகட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே மிகப் பெரிய மோசடி செய்தவர் என்றால் அது மேடாஃப்தான். இதுகுறுத்து ஏற்கெனவே தட்ஸ் தமிழில் சிறப்புச் செய்திக் கட்டுரை வெளிவந்தது நினைவிருக்கலாம்.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான பைனான்ஸியர்தான் இந்த மேடாஃப். பொதுமக்களிடம் ஏராளமான டெபாஸிட்டுகளை வாங்கிக் குவித்தவர், ஒரு கட்டத்தில் நம்ம ஊர் ராமலிங்க ராஜு ஸ்டைலில், எல்லாமே மாயை, என்னிடம் ஒன்றுமே இல்லை என கைவிரித்துவிட, முதலீட்டாளர்கள் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்கள்.
இவர் மோசடி செய்துள்ள தொகை ஒரு கோடி ரெண்டு கோடியல்ல… 150 பில்லியன் டாலர்களுக்கும் மேல். அத்தனையும் பொதுமக்களிடம் பெற்ற பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து மோசடிக் குற்றங்களையும் மேடாஃபும் ஒப்புக் கொண்டார்.
நேற்று அவரது வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதில் 150 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply