கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர் நெட் மூலம் ஆங்கிலப் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வி அளிப்பதற் காக மேற்கு வங்க கல்வித் துறை, சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஆங் கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்துள் ளது. அனைத்து மாவட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தை இணைய தளத்தின் மூலம் பெற ஏற்பாடுகள் நடந்து வருகின் றன.
இணைய தளத்தின் மூலம் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்து, மாவட்ட மற்றும் கிராமப்புற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இணைய தளத்தின் மூலமாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்பு கொள்ளவும் இந்த முறையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத் திய பிறகும், இன்டர்நெட் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தை மீண்டும் படிக்க வசதியிருப்பதால், தனியாக டியூஷன் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. முதல் கட்டமாக, 18 மாவட்டங்களில் இன்டர்நெட் மூலம் ஆங்கிலப் பாடம் போதிக்கப்பட உள்ளது. இந்த ஆங்கிலக் கல்வி, நகர்ப்புற மாணவர்களுக்கு கிடையாது.
முதலில் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்நெட் வழியாக ஆங்கிலம் போதிக்கப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கிலம் இணைய தளம் வழியாக கற்பிக்கப்பட உள்ளது.
Leave a Reply