சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் வரும் 31ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 202 இடங்கள், வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு 101 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சிலிங் இம்மாதம் 1ம் தேதி நடந்தது. கவுன்சிலிங்கின் முடிவில், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் 48 பேருக்கும், வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர் பிரிவில் 67 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவில் 154 இடங்களும், வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர் பிரிவில் 34 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை அண்ணா பல்கலைக் கழக ((www.annauniv.edu ) இணையதளத்தில் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான துணை கவுன்சிலிங் வரும் 31ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும். இதேபோல, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டினருக்கு 202 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Leave a Reply