இந்திய கடல்சார் பல்கலைக் கழக கவுன்சிலிங்கில் மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத் தும், கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாமல் சென்னையைச் சேர்ந்த மாணவன், அப்படிப்பில் சேர முடியாத நிலையில் உள்ளான்.
சென்னை அயனாவரத்தில் துணி இஸ்திரி செய்யும் வேலை செய்து வருபவர் தியாகராஜன்; இவரது மகன் கிருஷ்ணபிரபு, புரசைவாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து 1,060 மதிப்பெண் பெற்றுள்ளான்.பள்ளியில் மூன்றாவது இடம்பிடித்துள்ள கிருஷ்ணபிரபு, அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளான். இம்மாணவன், தமிழ் 176, ஆங்கிலம் 167, இயற்பியல் 174, வேதியியல் 173, கம்ப்யூட்டர் சயின்ஸ் 174, கணிதம் 196 மதிப்பெண் பெற்றுள் ளான்.இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர் வில், கிருஷ்ணபிரபு 717வது “ரேங்க்’ எடுத்துள்ளான். நாடு முழுவதுமிருந்து 6,700 பேர் எழுதிய இத்தேர்வில், 4,155 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தில் தற்போது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது.நேற்று நடந்த கவுன்சிலிங்கில் மாணவன் கிருஷ்ணபிரபுவிற்கு பாளையங்கோட் டையில் உள்ள பி.எஸ். என்., கல்லூரியில் பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர இடம் கிடைத்துள் ளது. இப்படிப்பில், ஆண் டிற்கு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி கிருஷ்ணபிரபு இப்பணத்தை கட்டி கல்லூரியில் சேர வேண்டும். நான்கு ஆண்டிற்கு மொத்தம் ஒன்பது லட்சம் ரூபாய் செலவாகும். கல்விக் கட்டணத்தை செலுத்த போதிய வசதி இல்லாததால், கிருஷ்ணபிரபு, கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துணி இஸ்திரி செய்து வரும் மாணவனது தந்தை தியாகராஜனுக்கு மாதத் திற்கு 3,000 ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது. “கவுன்சிலிங்கின் போது கட்ட வேண்டிய 10 ஆயிரம் ரூபாய் முன்பணத்தையே கடன் வாங்கித் தான் கட்டினேன். வங்கிக் கடன் பெறலாம் என அங்கு சென்றபோது, செக்யூரிட்டி கேட்கின்றனர்’ என தியாகராஜன் தெரிவித்தார்.தியாகராஜனும். அவரது மகன் கிருஷ்ணபிரபுவும் சென்னை அயனாவரம் எழுமலை தெருவில் 13/6 என்ற வீட்டு எண்ணில் வசித்து வருகின்றனர். மாணவனது படிப்பிற்கு உதவ விரும்புபவர்கள், அவனது தந்தை தியாகராஜனை 99405 25320 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply