ஆஸ்திரேலியாவில் காதலித்து ஏமாற்றிய திருச்சி பொறியாளரை விமானத்தில் துரத்திய நெல்லைப்பெண்

posted in: மற்றவை | 0

13_007காதலித்து ஓராண்டாக ஆஸ்த்ரேலியாவில் குடும்பம் நடத்திய காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த திருச்சி பொறியாளரை காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.


திருச்சி கண்டோன்மெண்ட் அலெக்ஸ்சாண்டிரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் தியோடர். இவரது மகன் கார்த்திக் தியோடர் (வயது30). இவர் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் கவிதா(வயது28). இவரும் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள காமன்வெல்த் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கவிதாவும் கார்த்திக் தியோடரும் அருகருகே பணி புரிந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இதனால் காதலர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கவிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திக் தியோடரும் கூறினார். உடனே அவரும் சம்மதம் தெரிவித்தார். காதலனை வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தார். காதலர்கள் நிச்சயதார்த்தம் நடத்தி மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

கவிதாவும் கார்த்திக் தியோடரும் தனி வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு வருடமாக கணவன்-மனைவி போல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் என்ஜினீயர் கார்த்திக் தியோடர் திடீரென ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் மாகாணத்துக்கு மாறுதலாகி சென்றார். இதுகுறித்து எந்த தகவலையும் கவிதாவிடம் தெரிவிக்கவில்லை. இதனால் காதலனை காணாததால் கவிதா அதிர்ச்சியடைந்தார். பின்னர் டார்வின் மாகாணத்தில் கார்த்திக் தியோடர் வேலை பார்ப்பதை தெரிந்து கொண்ட கவிதா தனது பெற்றோர், அண்ணன்களை அழைத்து கொண்டு சென்றார்.

அப்போது கார்த்திக் தியோடர் கவிதாவிடம் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கவிதாவும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள கார்த்திக் தியோடரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்ய விரும்பினர். இதைத் தொடர்ந்து சேலத்தை சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்தியோடருக்கும் நிச்சயம் நடந்தது. வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் உள்ள சர்ச்சில் திருமணமும் அதைத் தொடர்ந்து ஓட்டலில் வரவேற்பும் நடைபெறுவதாக திருமண பத்திரிகை அச்சிட்டு பெற்றோர்கள், உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.

15-ந்தேதி திருச்சியில் நடைபெறும் திருமணத்திற்கு கார்த்திக் தியோடர் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் உள்ள கவிதாவின் நண்பர் ஒருவர் கவிதாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே கவிதாவும் விமானத்தில் சென்னைக்கு கிளம்பினார். ஒரேவிமானத்தில் கவிதாவும் கார்த்திக் தியோடரும் சென்னைக்கு வந்தனர். ஆனால் கவிதாவை கார்த்திக் தியோடரும் பார்க்கவில்லை.

திருச்சி வந்த கவிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருச்சியில் கார்ர்த்திக் தியோடருக்கும் வேறொரு பெண்ணுக்கும் 15-ந்தேதி திருமணம் நடக்க போவதை கண்டு திடுக்கிட்டார். உடனே ஆஸ்திரேலியாவில் உள்ள தனது பெற்றோர், சகோதரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் விரைந்து திருச்சிக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து திருச்சிகலெக்டர் சவுண்டையாவுக்கு கவிதாவின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். கவிதாவை ஏமாற்றி, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயலும் என்ஜினீயர் கார்த்திக் தியோடர் குறித்து தெரிவித்தனர். பின்னர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கருணா சாகர், கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் ராஜசேகரன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் ஆகியோரிடம் புகார் தொ¤வித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், திருமணம் நடக்க இருந்த சர்ச்சில் தகவல் தெரிவித்தனர். மேலும் சேலம் பெண் வீட்டாரிடமும் தகவல் கொடுத்தனர்.

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற கார்த்திக் தியோடர் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *