திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி சாரங்கன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில் மப்பேடு, காக்களூர், சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
இதில் தொழிற்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நேரங்களில் தொழிற்சாலைப் பகுதிகளில் காவலாளிகளை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படையும், இரவு நேர ரோந்துப் பணியும் தீவீரப்படுத்தப்படும் என எஸ்பி சாரங்கன் கூறினார்.
மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருக்கும் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமா? என கேட்டனர்.
அதற்கு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முறையாக உள்ள அகதிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி வேலை வாய்ப்பு அளிக்கலாம் என எஸ்பி சாரங்கன் கூறினார்.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி முருகேசன், பொன்னேரி, தனிப்பிரிவு எஸ்ஐக்கள் ஆனந்தன், செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply