டெல்லி: உரிய நேரத்தில் வரிமான வரி செலுத்தாமைக்காக விஜய்ம ல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.26.46 கோடியை அபராதமாக விதித்துள்ளது மத்திய அரசு.
டிடிஎஸ் (tax deduction at source) எனும் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருமான வரிப் பணத்தை, இன்னமும் அரசுக்கு செலுத்தாத குற்றத்துக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்தார்.
கிங்பிஷர் தவிர ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும ரூ.11 கோடியும், எம்டிஎல்ஆர் நிறுவனத்துக்கு ரூ.5.65 கோடியும் டிடிஎஸ் செலுத்தாமைக்காக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply