விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
நுகர்வோர் பொருள்கள் விற்பனையிலும் இந்த நிறுவனம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் 5 சதவீகிதம் கூடுதல் வளர்ச்சியுடன் ரூ.6274 கோடியை எட்டியுள்ளது.
ஆனால் விப்ரோவின் ஐடி பணிகள் பிரிவில் 3.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி, “இந்த கால கட்டத்தில் ஒரு நிலையான வளர்ச்சியைக் காண முடிகிறது. நிச்சயம் அடுத்த காலாண்டில் இன்னும் நல்ல முடிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம். ஐடி சர்வீஸஸ் துறையிலும் இந்த வளர்ச்சி எதிரொலிக்கும்,” என்றார்.
Leave a Reply