பெட்ரோல் டீசல் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. விரைவில் அவற்றின் விலையானது குறையுமென்று மத்திய மந்திரி முரளிதியோரா மறைமுகமாக கூறியுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராஜ்ய சபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
கடந்த 2-ந்தேதி பெட் ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் ஐ.ஓ.சி., பி.பி.சி.எல், எச்.பி.சி.எல். ஆகிய பெட்ரோலிய நிறுவணங்களின் நஷ்டம் ரூ.4870 கோடியில் இருந்து ரூ.2,880 கோடியாக குறைந்துள்ளது.
விலை உயர்வுக்கு பின்னரும் கூட பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ.1.01, டீசல் லிட்டருக்கு 2 பைசா வீதமும் ஆயில் விற்பனை கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்தால், நலிந்த பிரிவு மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை விலை குறைக்கப்படும் என்றார்.
அவர் மேலும் கூறும் போது பெட்ரோல், டீசல் மீது விற்பனை வரி, “வாட்” வரியை மாநில அரசு கள் அதிக அளவில் விதித் துள்ளன. அதன் காரண மாகவும் அவற்றின் விலை கூடுதலாக உள்ளதுÓ என்றும் தெரிவித்தார்.
Leave a Reply