டெல்லி: நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஜூலை மாத இறுதியில் 271.6 பில்லியன் டாலராக (ரூ.13,03,680 கோடி) உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் தங்கம் கையிருப்பு 9,800 பில்லியன் டாலரிலிருந்து 9,671 பில்லிய் டாலராக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மற்றும் நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் பங்குகளை வெளியிட்டு அதிக நிதி திரட்டி உள்ளன. இந்தக் காரணங்களால் தான் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
Leave a Reply