புதுடில்லி: பருவமழை பொய்த்து விட்டதைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் வட மாநிலங்களில் வெகுவாகக் குறைந்து விட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க “நாசா’ செயற்கைக்கோள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பருவமழை தொ டர்ந்து பொய்த்து வருகிறது. இந் தாண்டு, வட மாநிலங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் அறவே மழை இல்லை. இதனால், கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. உணவு தானியம் உற்பத்தி வெகுவாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க “நாசா’ செயற்கைக் கோள் சமீபத்தில் அனுப்பிய படங்களில் வட மாநிலங்களின் நிலத்தடி நீர் கணிசமாகக் குறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டில்லி, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ”
நாசா ‘செயற்கைக்கோள் அளித்த படங்களையும், அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. ஆய்வில், “நிலத்தடி நீர்மட்டம் 2002ல் இருந்து ஆறு ஆண்டுகளில் 4 செ.மீ. குறைந்துள்ளது’ என்று தெரிவித்து இருக்கின்றனர். அதாவது, இந்த நான்கு மாநிலங்களில் கடந்த ஆறு ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 18 கன கிலோமீட்டர் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. ஆக, மொத்தம் இந்த ஆண்டுகளில் மொத்தம் 109 கன கி.மீ. தண்ணீர் வீணாகி இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.
உலக அளவில் உள்ள பெரிய நீர்த்தேக்கங்களில் தேக்கி வைத் துள்ள இருப்பு நீருக்கு இந்த வீணான நீர் சமம் என்றும் ஒப்பிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.இந்த இழப்பு, இந்தியாவில் உள்ள பெரிய நீர்த்தேக்கமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள “வெய்ங்காணா’ நீர்த்தேக்க இருப்பு நீரைவிட இரு மடங்கு அதிகம். அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரியான “மேட்’ ஏரியின் மொத்த கொள்ளளவில் மூன்று மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர். மேலும், இந்த நிலத்தடிநீர் பற்றாக்குறை அரசு மதிப்பிட்டதை விட அதிகமானதாகும். எப்போதுமில்லாதபடி இந்த நீர்மட்டக் குறைவு ஏற்பட்டுள்ளதால், வருங்காலத்தில் இந்த மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாய உற்பத்திக் குறைவும் ஏற்படும் அபாயம் அதிகமாகி உள்ளது.
Leave a Reply