உள்துறையை இரண்டாக பங்குபோட காங்கிரஸ் முடிவு
மகாராஷ்டிர புதிய முதல்வராக அசோக் சவான் நாளை பதவி ஏற்கிறார். உள்துறை யாருக்கு என்ற இழுபறி நீடிப்பதால் அவருடன் துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்கிறார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்துறையை கேட்பதால் அத்துறையை இரண்டாக பிரித்து பங்குபோட்டுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.