போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் – வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சென்னை : “ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.