சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்
புதுடில்லி : அப்பீல் மனு விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.