சபாஷ் ! இப்படித்தான் வீரம் பொங்க வேண்டும் ! துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதியை சுட்ட பெண் !

posted in: மற்றவை | 0

ஜம்மு: இளம் பெண்ணை கடத்த வந்த பயங்கரவாதிகளை அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு ஒட. ஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்கள் வீரம் அடைந்துள்ளனர்.

எல் அன்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஆர்டர்

மும்பை: எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ) நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டர் கிடைத்ததை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 0.61 சதவீதம் அதிகரித்தன.

தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற : அரசு டாக்டர்களுக்கு தடை: அரசு ஆலோசனை

posted in: அரசியல் | 1

புதுக்கோட்டை: “தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து, பரிசீலனை செய்யப்படும்’ என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: மருத்துவ படிப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த நிரஞ்சனா, புதுக்கோட்டை ஜான்சிராணி தாக்கல் செய்த ரிட் மனு: நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகள்.

அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்குப் பெரும் பற்றாக்குறை : ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் திண்டாட்டம்

posted in: உலகம் | 0

அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தியாளர்கள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

200 கிலோ டன் சக்திமிக்க அணு குண்டை தயாரிக்கும் வல்லமை உள்ளது: அனில் ககோட்கர்

posted in: மற்றவை | 0

1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தும் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தின் ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளனர்

posted in: உலகம் | 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கலை, அறிவியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்புகள் –

posted in: கல்வி | 0

சென்னை: “கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கூடுதலாக தொழில்நுட்ப படிப்பு வழங்கும் திட்டம் துவக்கப்படும்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்கள் முதலிடம்

குன்னூர்: ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது; மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு மட்டும் 91.5 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

சீன விமானப் படையோடு ஒப்பிட்டால்…உண்மையைச் சொல்கிறார் தளபதி நாயக்

posted in: மற்றவை | 0

காந்தி நகர்: “”விமானப் படை விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சீன விமானப் படையோடு ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கே இந்தியாவில் உள்ளது. இந்திய விமானப் படையில் பணியாற்றும் பைலட்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,” என, விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.