உரிய வாடகை செலுத்தாத விமானங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: உரிய வாடகை செலுத்தாததால், குத்தகைக்கு விடப்பட்ட இரண்டு விமானங்களை பறிமுதல் செய்வதற்கு அட்வகேட் கமிஷனரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வெளிநாட்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாத பாக்கித் தொகையை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை, வரும் 1ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.