ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து – சென்னை ஏடிசியின் அலட்சியமே காரணம்?
சென்னை: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தடம் மாறியதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழி காட்டுமாறு அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் தொடர்ந்து சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையத்தைத் (ஏடிசி) தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சென்னை ஏடிசியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.