சிங்கூர் நிலத்தைத் தரத் தயார், ஆனால்… டாடா நிபந்தனை
கொல்கத்தா: உரிய நஷ்ட ஈடு கொடுத்தால் சிங்கூர் நிலத்தை திருப்பித் தந்துவிடுவதாக டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் எந்த முதலீடும் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.