கேஜி காஸ்: அம்பானிகள் சண்டை – ‘பிரதமர் மத்தியஸ்தம் செய்யவில்லை’

டெல்லி: கேஜி காஸ் விவகாரம் தொடர்பாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையிலான பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிடவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ முயலவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு

ஐதராபாத் : நடப்பு நிதியாண்டில் 11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் அளித்த பேட்டியில் : பாரத ஸ்டேட் வங்கி வங்கி சமீப காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் கிளைகளை துவங்க திட்டமுள்ளது என்றார்.

சர்தார் படேலைக் களங்கப்படுத்தியதால் நீக்கம் ஜஸ்வந்த் சிங் விவகாரத்தில் அத்வானி விளக்கம்

posted in: அரசியல் | 0

சிம்லா: பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த்சிங்கை நீக்கியது வேதனை தரும் விஷயம். அதே நேரத்தில், அது அவசியமான முடிவு,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டு: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: தேர்தலில் ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டை பயன்படுத்த அனுமதிக்க கோரிய மனுவை பத்து வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இந்திய-ரஷ்யா கூட்டு தயாரிப்பு பீஷ்மா புதிய பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

posted in: மற்றவை | 0

இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியில் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

டெல்லி மாணவருக்கு சேலம் இளைஞரின் இதயம்

posted in: மற்றவை | 0

விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த சேலம் இளைஞரின் இதயம், டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு பொருத்தப்பட்டது. சேலம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, அப்பள வியாபாரி. இவரது மகன் தினேஷ் (22). தனியார் கம்பெனி சூப்பர்வைசராக இருந்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்களையும் சொத்துக்களையும் சிறிலங்காவிடம் கையளிக்க வேண்டும்: கோத்தபாய கோரிக்கை

posted in: உலகம் | 0

வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களின் சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்டிரிக்ட் விசா விதிமுறைகள் : ஆஸ்திரேலிய அரசு கிடுகிப்பிடி

posted in: கல்வி | 0

கான்பரா : ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விருப்பப்பட்டு விசாவுக்கு மனு தாக்கல் செய்பவர்களுக்கு இனி அவ்வளவு ஈசியாக விசா கிடைத்து விடாது. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் பல, வருமானத்துக்காக மானாவரியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்து வருவது குறித்து புகார் எழுந்தது.

எட்டாம் வகுப்பு முதல் எம்.பில்., வரை குவிந்த அருந்ததியினர்: வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் முற்றுகை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழக அரசின் அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, இனம் கண்டறிய நடத்தப் பட்டு வரும் சிறப்பு முகாமில், எட்டாம் வகுப்பு முதல், எம்.பில்., – பி.டி.எஸ்., படித்தோர் என, ஏராளமானோர் நேரில் வந்து தங்களை பதிந்து கொண்டனர்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் – 13வது இடத்தில் சோனியா

posted in: உலகம் | 0

நியூயார்க்: உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் [^] பட்டியலில் சோனியா காந்திக்கு 13வது இடமும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் [^] சந்தா கோச்சாருக்கு 20வது இடமும் கிடைத்துள்ளது.