மாணவர்களிடம் மந்திரி கேள்வி: பள்ளிகளில் கபில் சிபல் பார்வை
பஞ்ச்குலா (அரியானா):ஒரு நாள் பயணமாக அரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டம் சென்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அங் குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைப் பார்வையிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந் துரையாடினார். பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.