பிளஸ்டூ முடிவு வெளியான 10 நாளில் கவுன்சிலிங்’

posted in: கல்வி | 0

சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

கூட்டுறவு வங்கியில் கொள்ளையர் கைவரிசை: அலாரம் அலறியதால் பணம், நகை தப்பியது கழுத்தை இறுக்கி காவலாளி கொலை

posted in: மற்றவை | 0

பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்ற கொள்ளையர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பிவிட்டனர். போலீசாரிடம் சிக்கிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.

இதய தசை செயலிழப்பு கவனிப்பு மையம்: ராமச்சந்திரா மருத்துவமனையில் துவக்கம்

posted in: மற்றவை | 0

சென்னை: இதய தசை செயலிழத் தலை (ஹார்ட் பெயிலியர்) கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது.

தாயைக் கொன்ற ரவுடியைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் கைது!

posted in: மற்றவை | 0

புழல் சிறையில் இருந்து திருத்தணி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, திடீரென போலீசால் சுடப்பட்டு இறந்தான். மற்றொரு கைதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனது தாயின் மரணத்துக்கு பழி வாங்க, கைதியை போலீஸ்காரரே சுட்டுக் கொன்றார் என தெரியவந்துள்ளது. அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதவியாளர் பணிக்கு ஐ.டி., டிப்ளமோவை தகுதியாக கருதக்கோரி ஐகோர்ட்டில் மனு * மின்வாரியத்திற்கு நீதிபதி உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : “மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவையும் தகுதியாக கருத கோரிய மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப,’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. “இப்பணி நியமனங்கள் கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,’ எனவும் குறிப்பிட்டது.

மேலும் 3 அமைச்சர்கள் இன்ஜினியரிங் கல்லூரி துவக்கினர்

posted in: கல்வி | 0

சென்னை : இந்த ஆண்டு மேலும் மூன்று தமிழக அமைச்சர்கள், புதிதாக பொறியியல் கல்லூரி துவக்குகின்றனர். தமிழகத்தில் கடந்தாண்டு 76 தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன.

மோசடி செய்த இந்திய தம்பதிக்கு அமெரிக்காவில் 5 ஆண்டு சிறை?

posted in: உலகம் | 0

ஹூஸ்டன் : அமெரிக்காவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்தை அதிகளவில் நோயாளிகளுக்கு கொடுத்த இந்திய டாக்டர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியாக மோசடி செய்த இவர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது.

ஆசியில் இரு தமிழ்க் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்

posted in: மற்றவை | 0

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் இளம் குழந்தைகள் இருவர் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். பிறந்து 7 மாதங்களே ஆன பச்சிளம் பாலகர்களின் தந்தை செல்வின் அரியரத்தினம் திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது செல்லக் குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் சடலமாக கிடக்கக் கண்டு … Continued

புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்

posted in: உலகம் | 0

உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.