பொய் சொன்ன பெண்ணுக்கு ஜீவனாம்சம் நிராகரிப்பு: கணவனுக்கு கைகொடுத்தது தகவல் உரிமை சட்டம்
புதுடில்லி: பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செஷன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது; “வேலையில்லாமல் இருப்பதாக மனைவி பொய் சொல்கிறாள்’ என்பதை ஆதாரமாக காட்ட, கணவனுக்கு தகவல் உரிமை சட்டம் கைகொடுத்தது. டில்லியை சேர்ந்த இந்த தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு முற்றி, கடந்தாண்டு மணமுறிவு ஏற்பட்டது.