லைசன்ஸ் இல்லாத ஜெட் ஏர்வேஸ் பைலட்!
நெடும்பச்சேரி (கேரளா): காலாவதியான உரிமத்துடன் ஜெட் ஏர்வேசின் ஜெட்லைட் விமானத்தில் பணியாற்றிய துணை விமானி தரையிறக்கப்பட்டார். அவருக்குப் பதில் வேறு ஒரு துணை விமானி வரவழைக்கப்பட்டு பின்னர் விமானம் தொடர்ந்து பறந்தது.
நெடும்பச்சேரி (கேரளா): காலாவதியான உரிமத்துடன் ஜெட் ஏர்வேசின் ஜெட்லைட் விமானத்தில் பணியாற்றிய துணை விமானி தரையிறக்கப்பட்டார். அவருக்குப் பதில் வேறு ஒரு துணை விமானி வரவழைக்கப்பட்டு பின்னர் விமானம் தொடர்ந்து பறந்தது.
ஐ.நா.: இலங்கை கோரியுள்ள கடனுதவி குறித்து இதுவரை சர்வதேச நிதியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை உருவாக்கப்படும் என்று அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
புதுடில்லி: பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கித்தவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண் டுகளில் அந்நாட்டை சேர்ந்த 143 நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கிப் போட்டுள்ளன.
லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.
பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானநிலையத்துக்கு தாமதமாக வந்த விமானப்படை மருத்துவரை, மும்பைக்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் மறுத்தனர். இதை அடுத்து போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை நிறுத்தினார் அந்த மருத்துவர். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த இச் சம்பவத்தால் பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் தற்சமயம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.