மன்னிப்புக் கேட்டார் ‘ஜெய் பீம்’ இயக்குனர்!

posted in: தமிழகம் | 0

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என … Continued

மூத்த வழக்கறிஞர் என். நடராசன் காலமானார் – மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை, பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை

posted in: தமிழகம் | 0

26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த … Continued

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்

posted in: தமிழகம் | 0

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்.உடனடியாக சரிசெய்ய வேண்டும்ஒன்றிய அமைச்சருக்கு எனது கோரிக்கை.கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே.குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ … Continued

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ431.03 கோடிக்கு மதுவிற்பனை

posted in: தமிழகம் | 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ431.03 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில்தான் அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கொடி கட்டிப் பறப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாட்களில் … Continued

புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continued

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

posted in: தமிழகம் | 0

‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

‘அய்யா.. நான் வ உ சி பேரன்!’

posted in: தமிழகம் | 0

சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் … Continued

கோ ஆப்டெக்ஸை சீரமைத்த சகாயம் திடீர் இடமாற்றம்

posted in: தமிழகம் | 0

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சகாயம்: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.