இங்கிலாந்து மின்வாரியத்துடன் கைகோர்க்கிறது விப்ரோ டெக்

பெங்களூரு : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம், இங்கிலாந்தின் மின்பகிர்வு வழங்கும் நிறுவனமான எலக்டரிசிட்டி நார்த் வெஸ்‌ட்டுடன் ‌கைகோர்க்கிறது.

புதிதாக 800 பேரை பணியமர்த்துகிறது கோர்லாஜிக்

ஐதராபாத் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் பைனான்சியல் இன்பர்மேசன், புராபர்டி மற்றும் அனாலிடிக்ஸ் ‌சொல்யூசன்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான கோர்லாஜிக் நிறவனம், இன்னும் 6 மாதங்களுக்குள் புதிதாக 800 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இயற்கை ரப்பர் விலை உயர்கிறது

கொச்சி : சர்வதேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நம் நாட்டிலும் ரப்பர் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதால், உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.

டாலர் மதிப்பு சரிவால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருவதால் ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கோவை, திருப்பூர் ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.

சர்வதேச தொழிலதிபர் விருது ; டாடா பெயர் பரிந்துரை

புதுடில்லி: பார்ச்சூன் பத்திரிக்கையின் 2010 ம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த தொழிலதிபர் விருதுக்கான இறுதிப் போட்டிக்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பை தாஜ் ஓட்டலில் நவம்பர் 5,6ம் தேதிகளில் ரூம் காலிஇல்லை

மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டெர்நெட் பயன்படுத்தும் சீனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பீஜிங்: சீனாவில் இண்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன்மாத கணக்கெடுப்பின்படி 420மில்லியன்மக்கள் இண்டெர் நெட்டை பயன்படுத்தியுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் கணகெடுப்பை காட்டிலும் 36 மில்லியன் அதிகமாகும்.

ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக கடன் எதிரொலி : வங்கிகளின் லாபம் குறைகிறது

மும்பை : வங்கிகள், கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி உள்ளன. இந்த கடன் வசூலாகாத நிலை ஏற்பட்டால் வரும் 2011-12-ஆம் நிதி ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் வரிக்கு முந்தைய லாபம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது : பிரணாப் திட்டவட்டம்

ஒன்பது சதவீத வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும், முதலீடுகளையும் ஏற்படுத்தியுள்ளதால், பணவீக்கத்தின் தாக்கத்தை பொதுமக்கள் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மானாமதுரையில் டிவி தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது வீடியோகான்

சென்னை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ. 1500 கோடி முதலீட்டில், டிவி தயாரி்ப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.