பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

எகிப்துக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்

கோல்ட்டா: நடப்பு ஆண்டில் எகிப்து நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்ந்த இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

கடனுக்கான வட்டியை குறைக்கிறது இந்தியன் வங்கி

சென்னை : இந்தியன் வங்கி, வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. இதன்படி 5 வருடத்தில் திரும்பச் செலுத்தும், ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியை 10.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளது.

தெரசா நாணயம் வெளியிட முடிவு

சென்னை : ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ என்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மின்சார துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை – சுஷில் குமார் ஷிண்டே

சென்னை: நாட்டின் மின்சார துறையில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

இந்தியாவில் பெங்களூரு ‘பெஸ்ட்’ : சென்னைக்கு 153வது இடம்

புதுடில்லி : உலகளவில் வாழ்வதற்குத் தகுதியான இந்திய நகரங்களில் பெங்களூரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்கள் இடம் பிடிக்கின்றன.

ஆந்திராவில் அனல்மின் நிலையம் : ரூ.6,000 கோடி முதலீட்டில் அமைகிறது

ஐதராபாத் : சிங்கப்பூரைச் சேர்ந்த மின்துறை நிறுவனமான, ‘செம்ப்கார்ப்,’ அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் (எப்.டி.ஐ.,) அடிப்படையில் ஆந்திராவில் 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் அனல்மின் நிலையம் துவங்குகிறது.

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ 18000 கோடி லாபம்

மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை பெரிதும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ 18000 கோடி லாபம் கிடைத்துள்ளது.

அம்பானி சகோதரர்கள் சமரசத்தால் பங்குச் சந்தையில் ஏற்றம்

மும்பை : வாரத்தின் இறுதி நாளான நேற்று, அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள சமரசப் போக்கு மற்றும் புதிய ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

எண்ணெய் விலை ‘கிடுகிடு’: பருப்பு விலை குறையுது

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருளில் பருப்பு வகைகளின் விலைகள் படிப்படியாக குறைந்தாலும், எண்ணெய் வகைகளின் விலை, ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவது, மக்களை கவலையடைய வைத்துள் ளது.