ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் : ஏர்-இந்தியா நிறுவனம் சாதனை

சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு, 16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இனி எந்தநேரமும் உயரும்

புதுடில்லி : இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தை மத்திய அரசு முடிவு செய்து வந்த வழக்கத்தை, இனி அக்கம்பெனிகள் முடிவு செய்யும்.

யற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் நிறுவனங்களுக்கு பாதிப்பு

கொச்சி: இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் இயற்கை ரப்பர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பர் இறக்குமதியும் சரிவடைந்துள்ளது.

ஏறுமுகத்தில் விதை மஞ்சள் விலை

பொங்கலூர்: மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், விதை மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொங்கலூர் சுற்றுவட் டார பகுதியில், பி.ஏ.பி., பாசனம் பெறும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கிரீஸ் பொருளாதார நெருக்கடி இந்தியாவை ஒரு வகையிலும் பாதிக்காது- நிதித்துறை செயலாளர்

டெல்லி: கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியா வுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக பத்திரமாக உள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் எரிவாயு விலை மோதல்: முகேசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

டெல்லி: கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி

தூத்துக்குடி: இந்தியா முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டினால் போதும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வாடகை குறைய வாய்ப்புள்ளது.

பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு நிறுத்தம்: சோனி நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: தகவல்களை சேமிக்கும் கருவிகளுள் புகழ்பெற்ற ‘பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு, அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதாக, சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.