பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க பொருளாதாரம்

வாஷிங்டன்: 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் ரூ.31 கோடிக்கு மஞ்சள் விற்று சாதனை

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம், 2010 ஜன., 1 முதல் நேற்று வரை, 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

8 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு

மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.

புல்லட் புரூப் கார்: இறக்குமதிக்கு அனுமதி

புதுடில்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, புல்லட் புரூப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ., காரை இறக்குமதி செய்து, டில்லி பகுதியில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அட்சய திருதியை எதிர்பார்த்து தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

மும்பை: மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 27.8 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தான்.

புதிய நூறு டாலரை வெளியிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: புதிய 100 டாலர் கரன்சியை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.