உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ்

நியூயார்க்: உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் இந்தியாவின் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. புதுமைகளை புகுந்துவதில் உலகின் சிறந்த 50 நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப் பட்டது.

1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ்

புதுடில்லி: ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ் சுமார் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே(2010-11) இந்த வேலைவாய்ப்பு வழங்கப் பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்… லெக்ஸஸ் விற்பனையை நிறுத்திய டொயோட்டா!

நியூயார்க்: டொயோட்டா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான லெக்ஸஸ் ஜிஎக்ஸ, 460 மாடல் கார்கள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 6 மடங்கு அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியா, தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 6 மடங்கு (4.80 டன்) அதிகரித்து 27.70 டன்னாக உயர்ந்துள்ளது.

யூலிப் தடை: செபிக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடும் எதிர்ப்பு

டெல்லி: பங்குச் சந்தை சார்ந்த யூலிப் திட்டங்களை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடக்கூடாது என செபி விதித்த தடைக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நூல் வாங்க போவதில்லை விசைத் தறியாளர்கள் முடிவு

ஈரோடு: ”நூல் விலை குறையும் வரை நூற்பாலைகளிடம் இருந்து நூல் வாங்குவதில்லை என, விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்,” என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

கார்கள் விலை விரைவில் அதிகரிக்கும்

புதுடில்லி: ‘பொருட்களின் விலை, வட்டி வீதம் மற்றும் எக்சைஸ் வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால், கார் தயாரிப்பாளர்கள், தங்களின் உற்பத்தி பொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என, இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும்

மின் கட்டணம் உயர்வு குறித்து, மதுரையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங் பேசியபொழுது மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும் என்று தெரிவித்துள்ளார். சி.பி.சிங் பேசியதாவது:

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட் தொகையை விட அதிகம் – தமிழகத்தில் கலாநிதி மாறன்

பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.