மூலப்பொருள் விலையால்உருக்கு விலை அதிகரிப்பு

புதுடில்லி:மிகப் பெரிய உருக்கு உற்பத்தியாளர்களான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்), ஜே.எஸ். டபிள்யூ., மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர் வால், தங்கள் உற்பத்திப் பொருளின் விலையை, டன்னுக்கு 2,500 ரூபாய் உயர்த்தியது.

இந்திய தொலைபேசி நிறுவனங்களின் அந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளில் தளர்வு

மும்பை : இந்தியாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அயல்நாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

விரைவில் ஆப்பிரிக்காவிலும் ஏர்டெல் சேவை

புதுடில்லி : மிக விரைவில் ஆப்பிரிக்கா கண்டத்திலும் தனது தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த பார்தி ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்

புதுடில்லி: உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் உடன‌ே பான்கார்டுக்கு அப்ளை செய்யுங்கள்! இல்லையென்றால் உங்கள் வருமான வரி தொகையில் 20 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணம் நாளை முதல் தினமும் வட்டி அமல்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் தினசரி அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடப்பட உள்ளது.

பருப்பு விலை கிடுகிடு உயர்வு

சென்னை: மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததால், பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஐ.ஓ.சி.,யிடம் இருந்து ரூ. 1,400 கோடி புதிய ஆடர்: எல் அன்ட் டி

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டூயூப்ரோ), இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனிடம்(ஐ.ஓ.சி.,) இருந்து ரூ. 1,400 கோடிக்கு புதிய ஆடர் பெற்றுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம்

மதுரை: பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம், மதுரை மெயின் கிளையில் துவங்கப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் அழகுராஜன் தலைமை வகித்தார்.

சுத்தமான பெட்ரோல் விற்பனை: ஏப்., 1 முதல் விலை 41 பைசா கூடும்

புதுடில்லி: ‘இந்தியாவில் உள்ள 13 பெருநகரங்களில், வரும் 1ம் தேதி முதல், யூரோ-4 வாகன நியதிப்படி சுத்தமான எரிபொருள் விற்பனை செய்ய உள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசும் அதிகரிக்கும்’ என, பெட்ரோலியத் துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.