ரூ.10 பாலிமர் நோட்டு ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: ‘பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் ஒப்பந்தங்கள் செய்யவில்லை’ என, ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் காய திருப்பதி தெரிவித்துள்ளார்.

இந்திய கல்வி திட்டத்திற்கு ரூ.4,772 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு

புதுடில்லி : இந்தியாவில் முதல்நிலை மற்றும் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதலாக 1.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4,772 கோடி) கடன் உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

தமிழக பட்ஜெட் : சில முக்கிய அம்சங்கள்

சென்னை : 2010-11ம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தமிழக நிதி‌த்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

வெளிநாடுகளில் ரூ90000 கோடி முதலீடு செய்யும் ஓஎன்ஜிசி

டெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கைப்பற்றுவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் (ரூ.90 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன உதிரிபாகம் தயாரிப்பு: ஸ்ரீபெரும்புதூரில் புது தொழிற்சாலை

சென்னை: அமெரிக்காவின், பிரபல மோட்டார் வாகன உதிரி பாக தயாரிப்பு, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை திறந்துள்ளது.

டெபாசிட் வட்டியை மாற்றியமைந்தது: ஐ.ஓ.பி.

சென்னை : டெபாசிட் வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(ஐ.ஓ.பி.,) மாற்றியமைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் வட்டியை இவ்வங்கி மாற்றி அமைத்துள்ளது.

மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு லட்சம் பணியாளர் தேவை

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மலேசிய – இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கே.கே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள்

சென்னை : கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற் காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட உள்ளன.