உலகின் சிறந்த நிர்வாகிகள் முகேஷுக்கு 5ம் இடம்

புதுடெல்லி : இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட கார் இருந்தால் கூடுதல் வரி

புதுடெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க டெல்லி அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கோதுமை விலை குறையும்: வருகிறது ஆன்-லைன் வர்த்தகம்

புதுடில்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கோதுமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வெளிச் சந்தையில் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளது. டில்லியில் அக்டோபர் மாதம் 13 ரூபாய்க்கு விற்ற கோதுமை ஒரு கிலோ இப்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு அக்டோபரில் 15 ரூபாய்; இப்போது 18 ரூபாய்.

வங்கிகளை மிஞ்சியது அஞ்சலக டெபாசிட் 32 சதவீதம் உயர்வு

மும்பை: வங்கிகளின் டெபாசிட் திட்டத்தை விட, அஞ்சலக சேமிப்பையே பலரும் விரும்புகின்றனர். வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் சேமிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.310 குறைவு

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நிலவி வருகிறது. நேற்று சற்று அதிகரித்து ஒரு பவுன் ரூ.17,310 ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ.310 குறைந்து ரூ.17,000க்கு விற்கப்படுகிறது.

சொத்து மதிப்பு உயர்வில் இந்தியர்கள் முதலிடம்

மும்பை : கடந்த 6 மாதங்களில் தங்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக 68 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நமக்கு கடும் போட்டியாக உள்ள சீனாவில் இது வெறும் 46 சதவீதம்தான்.

சென்னை-யுஎஸ் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தம்!

பெங்களூர்: உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மெர்ஸ்க் லைன் தனது அமெரிக்க- சென்னை நேரடி கப்பல் போக்குவரத்தை வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

துபாயில் தாவூத் இப்ராகிம் ரூ.3,300 கோடி முதலீடு

புதுடெல்லி : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், துபாயில் ரூ.3,300 கோடி முதலீடு செய்திருப்பதாக போதை மருந்து கடத்தலுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

வருகிறது பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.