சத்யம் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்கள்!

மும்பை: சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த ரூ.7800 கோடி மோசடியில் அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸுக்கும் பெரும் பங்கிருப்பதாக இந்திய தணிக்கை நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது.

சென்னையில் உற்பத்தியாகும் போர்டு நிறுவன பிகோ கார்கள்

சென்னை: இந்தியாவின் சிறிய ரக கார் சந்தையில், அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனமும் நுழைந்து விட்டது. இந்நிறுவனம், சமீபத்தில் தனது, பிகோ காரை அறிமுகப்படுத்தியது. சென்னை மறைமலையடிகள் நகரில் போர்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், புதிய பிகோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

எல் அன்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஆர்டர்

மும்பை: எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ) நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டர் கிடைத்ததை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 0.61 சதவீதம் அதிகரித்தன.

ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்கள் முதலிடம்

குன்னூர்: ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது; மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு மட்டும் 91.5 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி

வாஷிங்டன் : இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக வங்கி நேற்று ஐந்து நாடுகளுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

தமிழக மாவட்டங்களுக்கான ரேங்கிங் – மதுரைக்கு 23வது இடம் – அரசு அதிருப்தி

சென்னை: தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமநாதபுரத்திற்கு 22வது ரேங்க் தந்துள்ளனர். இந்த தர வரிசைப் பட்டியலுக்கு தமிழக அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

பேனசோனிக் நிறுவனத்தின் புதிய ரக ரோபடிக் படுக்கை

டோக்கியோ: எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னனியில் உள்ள பேனசோனிக் நிறுவனம் புதிதாக ரோபடிக் படுக்கை ஒன்றை அறிமுகம் செய்கிறது. இந்த ரோபடிக் படுக்கையை படுக்கை மற்றும் வீல் சேராக உபயோகிக்கலாம்.

மீண்டும் ஊதியத்தை உயர்த்தும் ஐடி நிறுவனங்கள்!

பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.

இரண்டாயிரத்து 55 கோடி ரூபாய் முதலீடு: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

மைசூரூ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது, இன் போசிஸ் நிறுவனம் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித் துள் ளார். மைசூரில் நேற்று, இன் போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச கல்வி மையத் தை, காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:

கியர்லெஸ் ஸ்கூட்டர்: மஹிந்தரா அறிமுகம்

புதுடில்லி: கைனடிக் ஹோண்டா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள, மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம், புதிதாக இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.