கோயம்பேடு திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளிக்கு ராம்கி – அந்தோனி நிறுவனங்கள் போட்டி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு காய்கறி- பழங்கள் மார்க்கெட்டை சுத்தமாக பராமரிக்கவும், திடக் கழிவு மேலாண்மை செய்யவும், மற்றும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளது.

இரண்டு சொகுசு கார்களை அறிமுகப்படுத்துகிறது பி.எம்.டபிள்யு

புதுடில்லி : ஜெர்மனியின் ‌சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு., இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.இந்த கார்களை அறிமுகப்படுத்துவதோ இந்த ஆண்டில் விற்பனையை 3000 யூனிட்டுகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

ராமலிங்க ராஜுவின் ரூ.1000 கோடி சொத்துக்கள் ஜப்தி!

டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் அறிமுகம்

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் 4,000 மெ.வா., திறன் கொண்ட பவர் பிளாண்ட் அமைக்க இந்தியா வியூகம்

புதுடில்லி : பெருகி வரும் மின்சார தேவையை சமாளிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், ஈரானில் காஸ் சார்ந்த மின்சக்தி உற்பத்தி பிளாண்டை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

கேஜி காஸ்: அம்பானிகள் சண்டை – ‘பிரதமர் மத்தியஸ்தம் செய்யவில்லை’

டெல்லி: கேஜி காஸ் விவகாரம் தொடர்பாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையிலான பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிடவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ முயலவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு

ஐதராபாத் : நடப்பு நிதியாண்டில் 11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் அளித்த பேட்டியில் : பாரத ஸ்டேட் வங்கி வங்கி சமீப காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் கிளைகளை துவங்க திட்டமுள்ளது என்றார்.

அமெரிக்காவில் பிபிஓ பணிகளை துவக்கும் காக்னிஸைன்ட்

நியூயார்க்: காக்னிஸைன்ட் நிறுவனம் அமெரிக்காவின் பீனிக்ஸ் கிளையில் பிபிஓ பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 100 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது.

3500 பேரை பணியமர்த்தும் பாங்க் ஆஃப் பரோடா!

டெல்லி: இந்த நிதியாண்டிலேயே 3500 பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது தேசிய வங்கிகளுள் ஒன்றான பாங்க் ஆப் பரோடா.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு வருகிறது தடை!

டெல்லி: நாட்டில் பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.