பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள் : எகிறும் கச்சா எண்ணெய் விலை

சிங்கப்பூர் : எகிப்தில் தொடங்கி அல்ஜீரியா, டுனீசியா, பஹ்ரைன் , லிபியா என அடுத்தடுத்து சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வெடித்து வரும் புரட்சியின் தாக்கம், கச்சா எண்ணெய் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2000பேருக்கு வேலை:ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு

லண்டன்: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக 2000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு 240 டன் வெண்ணெய் சப்ளை ஆவின் ஒன்றியத்துக்கு ரூ.1.92 கோடி நஷ்டம்

சேலம்:சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆவின் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள ஆவின் இணையத்துக்கு, 240 டன் வெண்ணெய் சப்ளை செய்ததால், சேலம் ஆவினுக்கு, 1.92 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

டெல்லி: விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது.

போலி உதிரி பாகங்களால் அரசுக்கு ரூ.2,200 கோடி வருவாய் இழப்பு

டெல்லி: போலி ஆட்டோமொபைல் உதிரி பாகங்களால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தியாளர் சங்கம்(ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்குஏர் இந்தியா சலுகை

சென்னை:இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண, உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 50 சதவீத சிறப்பு தள்ளுபடியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார்களுக்கு கூடுதல் வரிச்சலுகை:மத்திய அரசுக்கு வேண்டுகோள்

டெல்லி :சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட’கிரின்’கார்களுக்கு பொது பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் விலை உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகையை முழுவதுமாக திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,இரண்டு மாதங்களுக்குள் கார் மற்றும் பைக் விலை மீண்டும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.

பட்டதாரிகளை அழைக்கிறது டிசிஎஸ்

மும்பை : இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசி‌எஸ்), இந்தாண்டில், அதிகளவில் பட்டதாரிகளை ‌பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ. துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும்

புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.