பள்ளிகளில் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே சட்டம்:ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை:”தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், லாப நோக்கில் கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதை உறுதி செய்யவும் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித் துள்ளது.

பி.எஸ்.என்.எல்., எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர் சங்க தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு:சேர்மன் பதிலளிக்க நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மதுரை:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பி.எஸ்.என்.எல்., எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அதன் சேர்மன் மற்றும் தேசிய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கழுவிய நீரில் கைதிகளுக்கு தேநீர் தரும் கொடூரம்:சிறைக்கு கோர்ட் கண்டனம்

posted in: கோர்ட் | 0

மும்பை:கைகழுவிய தண்ணீரில் தேநீர் தயாரித்து கைதிகளுக்கு கொ டுத்த தானே மாவட்ட சிறைக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.குற்றம் செய்தவர்களை தண்டிக்க தான் சிறை.

மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் பணி நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை :மதுரை காமராஜ் பல்கலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான பணி நியமன பட்டியலை, கோர்ட் இறுதி முடிவுக்கு பின் வெளியிட வேண்டும் என ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.

யானைமலையில் ஒரு கல்லைக் கூட தொடக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:சிற்பக் கலைநகரம் அமைப்பது குறித்து யானைமலையை ஆய்வு செய்யும் போது, கோர்ட் உத்தரவின்றி ஒரு சிறிய கல்லைக் கூட தொடக் கூடாது என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

வீடற்றவர்களுக்கு ரேஷன் கார்டுகள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:”டில்லியில் வீடில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு கார்டு தாரருக்கும் 10 லிட்டர் கெரசின் மற்றும் 15 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்’ என, அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பி.டி.கத்தரிக்காய்க்கு ஒப்புதலை எதிர்த்த மனு : மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : பி.டி.கத்தரிக்காய்க்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான ஒப்புதலை, மரபணு பொறியியல் அங்கீகார குழு அளிக்க முடிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

21 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை : அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம்மீட்டுக் கொண்டு வரக் கோரி மேலும் ஒரு மனு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கருப்புப் பணத்தை, மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் எங்கே? கேரளாவிடம் கேள்வி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினால், அது அணையை பாதிக்குமா? அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டினால், அணை உடையும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.