ஈழத்தமிழர்களுக்கு தமிழக கல்லூரியில் இடம் உறுதி
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளில் கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும் என்று பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளில் கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும் என்று பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். “தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மகாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இன்டர் நெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஆந்திராவுக்கு அடுத்த படியாக இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகத்தில் அதிகம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இந்த மாநிலத்தில் அதிகம் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்திய கடல்சார் பல்கலைக் கழக கவுன்சிலிங்கில் மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத் தும், கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாமல் சென்னையைச் சேர்ந்த மாணவன், அப்படிப்பில் சேர முடியாத நிலையில் உள்ளான்.
சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை: இனி 8ம் வகுப்பை முடித்துவிட்டாலே ஐடிஐகளில் சேரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு மேலும் மூன்று தமிழக அமைச்சர்கள், புதிதாக பொறியியல் கல்லூரி துவக்குகின்றனர். தமிழகத்தில் கடந்தாண்டு 76 தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன.
“அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.
பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.