நம் தயாரிப்பில் உருவான கிரையோஜெனிக் இன்ஜின் ரெடி
பெங்களூரு : முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு : முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
புதுடில்லி: அரியானாவின் மானேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி நிறுவன தொழிற்சாலைக்கு, பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகத்தை, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனம் துவக்கியது.
நாமக்கல் : ” பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) சார்பில், வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டணம் மாற்றி அமைத்தல் மனு மீது, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் நடக்கிறது.
சென்னை:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி மூலம் கடத்தி வரப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக ஒருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
திண்டுக்கல்:தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல்:ரேஷன் கடைகளுக்கு தேவையான எடையாளர், விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பொதுவிநியோக திட்டத்தில் எந்த வித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
கடலூர் : அதிகாரி கேட்டதாக, குறவர் ஒருவர் நரியை கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.